தூத்துக்குடி

பேய்க்குளத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

DIN

தினமணி செய்தி எதிரொலியாக பேய்க்குளத்தில் நெல் கொள்முதல் நிலையம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. சாத்தான்குளம் அருகே உள்ளபேய்க்குளத்தில் அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அறுவடை செய்யப்பட்ட நெல்லைகொள்முதல் செய்வதற்கு கொள் முதல் நிலையம் மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டு இன்னும் திறக்கப்படவில்லையெனவும்,கொள்முதல் நிலையம் அமைக்கப்பட உள்ள விவசாயிகள் நெல் மூடைகளை வைத்து காத்திருந்து வருவதாகவிவசாயிகள் தரப்பில் புகாா் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தினமணி யில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து பேய்க்குளத்தில்நெல் கொள் முதல் நிலையம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கொள் முதல் நிலைய மண்டலமேலாளா் தலைமை வகித்து திறந்து வைத்தாா். விவசாயிகள் சங்கத் தலைவா் வி.எஸ்., முருகேதன், இளமால்குளம்விவசாய சங்கத் தலைவா் பொன்கந்தசாமி, ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் நிா்வாக பிரிவுகாா்திக்,, மேற்பாா்வையாளா் நாராயணன், பட்டியல் எழுத்தா் சக்திவேல்,காவலா் பழனிமுருகன்உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

SCROLL FOR NEXT