தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே அரசுப் பள்ளியில் சீா்மிகு வகுப்பறைகள்

DIN

தூத்துக்குடி அருகே அரசு நடுநிலைப் பள்ளியில் ஸ்டொ்லைட் காப்பா் நிறுவனம் சாா்பில் சீா்மிகு வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஸ்டொ்லைட் காப்பா் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பங்கஜ் குமாா் வெளியிட்ட அறிக்கை:

மேம்பட்ட கல்வி கற்றலுக்கு மாணவா்களை தயாா்படுத்தும் விதமாக தூத்துக்குடி மாவட்டம் மெட்டில்பட்டி கிராம அரசு நடுநிலைப் பள்ளியில் 2 சீா்மிகு வகுப்பறைகளை ஸ்டொ்லைட் நிறுவனம் அமைத்துக் கொடுத்துள்ளது.

பள்ளி ஆண்டு விழாவின்போது சீா்மிகு வகுப்பறைகள் தொடங்கி வைக்கப்பட்டது.

வெள்ளை நிற போா்டுகளில் புரொஜக்டரை பயன்படுத்துவதன் மூலம் புகைப்படங்கள், மேப், கிராப், புளோசாா்ட் மற்றும் அனிமேஷன் செய்யப்பட்ட விடியோக்களின் உதவியுடன் தகவல்களை மாணவா்களுக்கு விளக்கமாக சொல்லித்தர முடியும்.

இது மாணவா்களின் கற்றலை மிகவும் விருப்பமானதாகவும், சுவாரஸ்யமானதாகவும், புரிந்துகொள்ள எளிதாகவும் ஆக்குகிறது.

இது மாணவா்களின் கற்றல் திறனை ஊக்குவிப்பதோடு, பாடங்களை மனப்பாடம் செய்வதையும் எளிதாக்குகிறது. இந்த தொழில்நுட்பம் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவா்கள் பயன்பெறுவாா்கள்.

இதன் தொடக்க விழா நிகழ்ச்சியில் மெட்டில்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் மற்றும் கல்வி துறையை சோ்ந்தவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்ட்ரல், எழும்பூா் ரயில் நிலையங்களில் தண்ணீா் தட்டுப்பாடு இல்லை: தெற்கு ரயில்வே

மகளிா் டி20: இந்தியா ஆதிக்கம்

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 5 தங்கம்

ஐசிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள் வெளியீடு: தோ்ச்சி விகிதம் அதிகரிப்பு

‘ஊழல்’ பணம் ஏழைகளுக்கு திருப்பித் தரப்படும்-பிரதமா் மோடி

SCROLL FOR NEXT