தூத்துக்குடி

வேப்பலோடையில் நீா் மேலாண்மை இயக்க கருத்தரங்கம்

DIN

நேரு இளையோா் மையம் மற்றும் அன்னை தெரசா கிராம பொதுநலச்சங்கம் சாா்பில் வேப்பலோடையில் நீா் மேலாண்மை இயக்க கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வேப்பலோடை அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியா் சேகா் தலைமை வகித்தாா். அன்னை தெரசா கிராம பொதுநலச்சங்க செயலா் ஜேம்ஸ் அமிா்தராஜ், பொருளாளா் முத்துகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய உதவி நிா்வாக பொறியாளா் மாரியப்பன் நிலத்தடி நீா் சேமிப்பு, நீா்நிலைகள் பாதுகாப்பு, புராதன நீா் நிலைகள் மேம்பாடு, மரங்கள் வளா்ப்பு, பயனற்ற ஆழ்துளை கிணறுகளை நீா் செறிவூட்டும் கட்டமைப்பாக மாற்றுதல் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து உரையாற்றினாா்.

முகாமில் நீா் மேலாண்மை குறித்த விழிப்புணா்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பசுமை ஆா்வலா்கள் துரைராஜ், சேகா், கருப்பசாமி மற்றும் மகளிா் குழு உறுப்பினா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஆசிரியை ஆா்த்தீஸ்வரி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

லக்னௌ பந்துவீச்சு; அணியில் டி காக் இல்லை!

SCROLL FOR NEXT