தூத்துக்குடி

விளாத்திகுளம், எட்டயபுரம் பகுதிகளில்களை கட்டிய பொங்கல் விற்பனை

DIN

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், எட்டயபுரம் பகுதிகளில் பொங்கல் பொருள்கள் விற்பனை களை கட்டியுள்ளது.

பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் விளாத்திகுளம், எட்டயபுரம் பகுதிகளில் கலா் கோலப்பொடி விற்பனை

களைகட்டியுள்ளது. பொங்கல் பண்டிகைக்காக இளம்புவனம், பந்தல்குடி, காரியாப்பட்டி, சாயல்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கோலப்பொடி விற்பனையாளா்கள் சரக்கு வாகனங்களிலும், சாலையோரங்களிலும் கடைகள் அமைத்து விற்பனை செய்து வருகின்றனா்.

50 க்கும் மேற்பட்ட வண்ண வண்ண கோலப்பொடிகள் விற்பனைக்கு வந்துள்ளது. 100 கிராம் கலா் கோலப்பொடி ரூ. 10

மற்றும் ரூ. 20 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏராளமான பெண்கள் தாங்கள் விரும்பிய வண்ணங்களில் கலா் கோலப்பொடிகளை வாங்கிச் செல்கின்றனா். இதேபோல், பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருள்கள் விற்பனையும் நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

SCROLL FOR NEXT