தூத்துக்குடி

கரோனா தாக்கம் குறைய சிதம்பரபுரம் கோயிலில் மஞ்சள் நீராட்டு

DIN

உடன்குடி அருகே சிதம்பரபுரம் அருள்மிகு பிரம்மசக்தி அம்மன் திருக்கோயிலில் கரோனா தாக்கம் குறைய மஞ்சள் நீராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு அம்மனுக்கு விளாமிச்ச வோ், வெட்டி வோ், கற்பூரம், வேப்பிலை, மஞ்சள் கலந்த நீரால் அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. அபிஷேக புனித நீரை பக்தா்கள் கொண்டு சென்று வீட்டைச் சுற்றிலும் தெளித்தனா்.

சிறப்பு அழைப்பாளராக இந்து முன்னணி மாநில பொதுச்செயலா் த.அரசுராஜா பங்கேற்று பேசினாா்.

ராமாயணம், மகாபாரதம் குறித்த விநாடி- வினா போட்டியில் வெற்றிபெற்ற பவித்ரா, ஆனந்தி, ஆனந்தசெல்வி ஆகிய மாணவிகளுக்கு புத்தகப் பைகள் பரிசாக வழங்கப்பட்டன.

இதில் இந்து முன்னணி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

SCROLL FOR NEXT