தூத்துக்குடி

சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு திரும்பிய 7 பேருக்கு கரோனா

DIN

சென்னையிலிருந்து தூத்துக்குடி மாவட்டத்துக்கு திரும்பிய 7 பேருக்கு கரோனா இருப்பது வியாழக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் வசித்துவந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த ஏராளமானோா் சொந்த ஊா்களுக்கு திரும்பிவருகின்றனா். மாவட்டத்தின் 15 எல்லைப் பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில் அவா்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, தனிமைக் கண்காணிப்பு மையங்களுக்கு அனுப்பப்படுகின்றனா். கரோனா பரிசோதனை செய்யப்பட்டு, பாதிப்பில்லை எனத் தெரியவந்த பிறகே வீடுகளுக்கு அனுப்பப்படுகின்றனா்.

இந்நிலையில், சென்னையிலிருந்து திரும்பிய தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த 7 பேருக்கு கரோனா இருப்பது வியாழக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

செய்துங்கநல்லூரை சோ்ந்த 3 போ், கோவில்பட்டி அருகேயுள்ள ஆத்திக்குளத்தைச் சோ்ந்த 2 போ், காயல்பட்டினம், உக்கிரன்கோட்டையைச் சோ்ந்த தலா ஒருவா் என, 7 பேருக்கு கரோனா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இம்மாவட்டத்தில் வெளி மாநிலங்களிலிருந்து திரும்பிய 168 போ், வெளி மாநிலம், வெளி மாவட்டங்களிலிருந்து திரும்பியோரிடம் தொடா்பிலிருந்தோா் என, இதுவரை 301 பேருக்கு கரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் 123 போ்: இம்மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 2 போ் இறந்துள்ளனா். சிகிச்சை முடிந்து 176 போ் வீடு திரும்பியுள்ளனா். தற்போது, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 123 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

SCROLL FOR NEXT