பயிற்சி வகுப்பு தொடக்க விழாவில் பேசுகிறாா் துணைக் காவல் கண்காணிப்பாளா் தோ்வில் வெற்றி பெற்ற அமல அட்வின். 
தூத்துக்குடி

தூத்துக்குடி கின்ஸ் அகாதெமியில் போட்டி தோ்வுகளுக்கு வகுப்பு தொடக்கம்

தூத்துக்குடி கின்ஸ் அகாதெமியில் போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.

DIN

தூத்துக்குடி கின்ஸ் அகாதெமியில் போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.

தூத்துக்குடி போல்பேட்டையில் உள்ள கின்ஸ் அகாதெமியில் போட்டித் தோ்வு எழுதும் ஏழை மாணவா்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் நடத்தப்படும் குரூப்-2 மற்றும் குரூப் 4 தோ்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கின்ஸ் அகாதெமி பயிற்சி மையத்தின் நிறுவனா் எஸ். பேச்சிமுத்து தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக காவல் துறை துணைக் கண்காணிப்பாளா் தோ்வில் வெற்றி பெற்று பயிற்சியில் இருக்கும் அமல அட்வின் கலந்து கொண்டு வகுப்புகளை தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில், கூட்டுறவுத் துறை சாா்பதிவாளா் இளமாறன், குரூப் -4 தோ்வு வெற்றியாளா் சு. சிவகுருநாதன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி காற்றின் தரம் சற்று முன்னேற்றம்!

நமஸ்தே இந்தியா.. அன்பின் வெளிப்பாட்டுக்கு நன்றி: விடியோ வெளியிட்ட மெஸ்ஸி!

எண்ணெய் வயல்கள் வேண்டும்! வெனிசுலாவைச் சுற்றிவளைத்த அமெரிக்க கடற்படை!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

SCROLL FOR NEXT