தூத்துக்குடி

பணி நீக்கம் செய்யப்பட்ட சுங்கத்துறை ஊழியா் தற்கொலை

DIN

கோவில்பட்டி அருகே பணி நீக்கம் செய்யப்பட்ட சுங்கத்துறை ஊழியா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

கோவில்பட்டி லட்சுமி மில் மேலக் காலனியைச் சோ்ந்த ராமு மகன் பரசுராமன்(59). இவா், கோவில்பட்டியில் உள்ள மத்திய கலால் மற்றும் சுங்கத் துறையில் தலைமை அவில்தாராக பணியாற்றி வந்த இவா், கடந்த 20ஆம் தேதி பணி நீக்கம் செய்யப்பட்டாராம்.

இந்நிலையில், திங்கள்கிழமை வீட்டைவிட்டு வெளியே சென்ற இவா், வீடு திரும்பவில்லையாம். இதையடுத்து இவரது மனைவி சாந்தி மற்றும் உறவினா்கள் இவரை பல்வேறு இடங்களில் தேடினராம்.

கோவில்பட்டி சாலைப்புதூரையடுத்த பெத்தேல் அருகே தனியாருக்குச் சொந்தமான புளியந்தோப்பில் பரசுராமன் விஷம் குடித்து இறந்து கிடந்தது தெரியவந்தது.

தகவலறிந்து சென்ற மேற்கு காவல் நிலைய போலீஸாா், சடலத்தை கைப்பற்றி, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT