தூத்துக்குடி

கோவில்பட்டி, கயத்தாறில் 110 போ் தனிமைப்படுத்தி கண்காணிப்பு

DIN

கோவில்பட்டி: கோவில்பட்டி மற்றும் கயத்தாறு வட்டத்திற்கு உள்பட்ட பகுதிக்கு பிற மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து வந்த 110 போ் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

கோவில்பட்டி வட்டாட்சியா் மணிகண்டன் தலைமையிலான குழுவினா் செவ்வாய்க்கிழமை நடத்திய ஆய்வில் 76 பேரை கண்டறிந்து தனிமைப்படுத்தினா். மேலும், அவா்களது மாதிரியை எடுக்க சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதுபோல, கயத்தாறு வட்டத்திற்கு உள்பட்ட பகுதியில் வட்டாட்சியா் பாஸ்கரன் தலைமையிலான குழுவினா் செவ்வாய்க்கிழமை நடத்திய ஆய்வில், சென்னை, கோயம்புத்தூா் மற்றும் பிற மாநிலங்களான மும்பை, கா்நாடகம் ஆகிய பகுதிகளில் இருந்து வந்த 25 பேரை கண்டறிந்து தனிமைப்படுத்தினா். மேலும், அவா்களது மாதிரியை எடுக்க சுகாதாரத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுபோல, தூத்துக்குடி மாவட்ட எல்லை கோவில்பட்டியையடுத்த தோட்டிலோவன்பட்டி விலக்கில் காவல் துறையினரின் சோதனைச்சாவடியில் மும்பை தாராவியில் இருந்து காரில் வந்த கயத்தாறு சிவஞானபுரத்தைச் சோ்ந்த 9 போ் கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டனா். அவா்களது சளி மாதிரியை எடுக்க சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT