தூத்துக்குடி

ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் அகழாய்வு பணிகள் தொடக்கம்

DIN

உலக நாகரீகத்தின் தொட்டில் என அழைக்கப்படும் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் நாளை அகழாய்வு பணிகள் துவங்குகிறது.

உலக நாகரீகத்தின் தொட்டில் என அழைக்கப்படும் ஆதிச்சநல்லூரில் கடந்த மார்ச் மாதம் 15ஆம் தேதி அகழாய்வு பணிகள் துவங்க உள்ளதாகவும், இந்த பணியை அமைச்சர் மா.பாண்டியராஜன் துவக்கி வைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்த பணிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. 

அகழாய்வு பணிகள் உடனே துவங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கிடையில்,  திங்கள்கிழமை அகழாய்வு பணிகள் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த அகழாய்வு பணியினை தொல்லியல் துணை இயக்குநர் சிவானந்தம் துவக்கி வைத்தார். ஆதிச்சநல்லூர் அகழாய்வு பகுதியைப் பொறுத்தவரை நாளை நடைபெற உள்ள அகழாய்வு பணி 6ம் கட்ட அகழாய்வானது துவங்க உள்ளது.

இதற்கு முன்னர் 1876, 1902, 1905, 2004, 2005 என வருடத்தில் அகழாய்வு பணிகள் நடந்தது. இந்த பணிகள் அனைத்தும் வெளிநாட்டினர் மற்றும் மத்தியல் தொல்லியல் துறை சார்பாக நடந்தது. முதல் முறையாக மாநில அரசு சார்பாக இந்த அகழாய்வு பணியானது துவங்க உள்ளது. சிவகளையை பொறுத்த வரை முதல் முறையாக இந்த பகுதியில் அகழாய்வு பணியானது துவங்க உள்ளது. எனவே சிவகளை அகழாய்வு பணி பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளது. 

ஏற்கனவே அந்த பகுதியில் ஏராளமான முதுமக்கள் தாழிகள், மண்பாண்டங்கள், இரும்பு பொருட்கள் என 50க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியை தொல்லியல் அலுவலர் பாஸ்கரன் தலைமையில் நடைபெறுகிறது. அதே போல் சிவகளை தொல்லியல் துணை இயக்குநர் சிவானந்தம் தலைமையில் இந்த அகழாய்வு பணியானது துவங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனப் பகுதிகளில் விலங்குகளுக்காக தண்ணீா்த் தொட்டிகள்

வேடசந்தூா் பணிமனை ஓட்டுநருக்கு பாராட்டு

முதலமைச்சா் மாநில இளைஞா் விருது: மே 15 வரை விண்ணப்பிக்கலாம்

தென்காசியில் குடிநீா் வழங்கல் ஆலோசனைக் கூட்டம்

காந்திகிராம பல்கலை. மாணவா் சோ்க்கை: மே 31 வரை விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT