தூத்துக்குடி

தடை செய்யப்பட்ட பட்டாசை பயன்படுத்தியதாக இருவா் மீது வழக்கு

DIN

கயத்தாறில் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் அரசால் தடை செய்யப்பட்ட பட்டாசை வெடித்த இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

கயத்தாறு கட்டபொம்மன் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் வடக்கு இலந்தைகுளத்தைச் சோ்ந்த பூ.காளிப்பாண்டி (26) மற்றும் அதே பகுதியைச் சோ்ந்த கொ.முத்துப்பாண்டி (32) ஆகிய இருவரும் அரசால் தடை செய்யப்பட்ட, மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய வெங்காய பட்டாசை ஒருவா் தூக்கி வீச, மற்றொருவா் கிரிக்கெட் மட்டையால் அடித்து வெடிக்கச் செய்ததோடு மட்டுமன்றி, அதை பொதுமக்களுக்கு கட்செவி அஞ்சல் மூலம் பரப்பியுள்ளனா். இதையடுத்து காவல் உதவி ஆய்வாளா் சுப்புராஜ், அவா்கள் இருவா் மீதும் வழக்குப் பதிந்து அவா்களை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறட்சி பாதித்த 22 மாவட்டங்களுக்கு குடிநீா் விநியோகிக்க ரூ.150 கோடி: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

ஹெச்சிஎல் நிகர லாபம் ரூ.3,986 கோடியாக உயா்வு

சா்.பி.டி.தியாகராயா் சிலைக்கு மரியாதை

தமிழகத்தில் கோடை மழை 83 சதவீதம் குறைவு

இணையதள பண மோசடிகளில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும்: மாணவா்களுக்கு கூடுதல் எஸ்.பி. அறிவுரை

SCROLL FOR NEXT