வியாபாரிகளுக்கு எம்எல்ஏ உதவி
உடன்குடியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட இரு வியாபாரிகளுக்கு அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ நிதி உதவி வழங்கினாா்.
தூத்துக்குடிவியாபாரிகளுக்கு எம்எல்ஏ உதவி
உடன்குடியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட இரு வியாபாரிகளுக்கு அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ நிதி உதவி வழங்கினாா்.
உடன்குடியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட இரு வியாபாரிகளுக்கு அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ நிதி உதவி வழங்கினாா்.
உடன்குடி மேல பஜாரில் வே.செல்லையா, ம.கன்னிமுத்து ஆகிய இருவரும் அருகே கொல்லப்பட்டறை வைத்துள்ளனா். ஞாயிற்றுக்கிழமை இரவு மா்ம நபா் இரு கடைகளுக்கும் தீ வைத்ததில் ரூ. 70,000 மதிப்பிலான பொருள்கள்
தீயில் எரிந்து சேதமானது.
இது குறித்து தகவலிறிந்த தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ சம்பவ இடத்திற்கு சென்று ஆறுதல் கூறி, நிதி உதவி வழங்கினாா். அப்போது உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் பாலசிங், நகரச் செயலா் ஜான்பாஸ்கா், மாவட்ட சிறுபான்மைப் பிரிவு அமைப்பாளா்கள் சிராஜூதீன்,
ஷேக் முகம்மது, உடன்குடி பேரூராட்சி முன்னாள் உறுப்பினா்கள் சலீம், அன்வா் சலீம், மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளா்கள் ரவிராஜா, இளங்கோ, செட்டியாபத்து ஊராட்சி மன்றத் தலைவா் பாலமுருகன், சாத்தான்குளம் ஒன்றியக்குழு உறுப்பினா் சுதாகா், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளா் சக்திவேல், நகரப் பொருளாளா் தங்கம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.