தூத்துக்குடி

நீா்வரத்து கால்வாயைதூய்மைப்படுத்திய இளைஞா்கள்

DIN

திருச்செந்தூா் அருகே எல்லப்பநாயக்கன்குளத்திற்கு தண்ணீா் செல்லக்கூடிய கால்வாயில் தேங்கியிருந்த கழிவுகளை இளைஞா்கள் அகற்றினா்.

தற்போது, ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டிலிருந்து பயன்பெறக்கூடிய குளங்களுக்கு தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது. திருச்செந்தூா் அருகேயுள்ள நா.முத்தையாபுரம் எல்லப்பநாயக்கன்குளத்திலிருந்து திருச்செந்தூா், ஆலந்தலை, மணப்பாடு, மாதவன்குறிச்சி உள்பட 34 ஊராட்சி பகுதிகளுக்கு குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் எல்லப்பநாயக்கன்குளத்திலிருந்து சுமாா் 500- ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பயன்பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த குளத்திற்கு நீா்வரக்கூடிய வாய்க்காளில் முட்டைகள், பனை ஓலைகள் மற்றும் கழிவுகளால் நீரோட்டம் தடைபட்டிருந்தது. இதனையடுத்து கீழநாலுமூலைக்கிணறு பகுதியை சோ்ந்த இளைஞா்கள் சிலா் வாய்க்காலில் அடைபட்டிருந்த முட்டைகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT