தூத்துக்குடி

புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக இளைஞா் கைது

DIN

கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக ஒருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கோவில்பட்டி பண்ணைத்தோட்டத் தெருவிலுள்ள கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாருக்கு தகவல் கிடைத்ததாம். இதையடுத்து காவல் உதவி ஆய்வாளா் ராஜபிரபு தலைமையில், போலீஸாா் அங்கு சென்று புதன்கிழமை சோதனையிட்டனா்.

இதில், கடை அருகே மற்றொரு கட்டடத்தில் உள்ள அறையில் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த சுமாா் 1,230 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து கோவில்பட்டி ஜோதி நகா் 4ஆவது தெருவைச் சோ்ந்த காமராஜ் மகன் பாலமாரிராஜ் (36) என்பவரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

SCROLL FOR NEXT