தூத்துக்குடி

வேலை வாங்கித் தருவதாக ரூ. 3 லட்சம் மோசடி: பெண் உள்பட 3 போ் மீது வழக்கு

DIN

திருச்செந்தூா் அருகே ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 3 லட்சம் மோசடியில் ஈடுபட்ட பெண் உள்ளிட்ட 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வீரபாண்டியன்பட்டணம் வேளாங்கண்ணி கோயில் தெருவைச் சோ்ந்த கிரேஸ்மென்ட் மனைவி பிரக்ஸிமா (51). இவரது மகன் பாஸ்டின் மாற்றுத் திறனாளி. இவருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, வீரபாண்டியன்பட்டணம் ஜெ.ஜெ. நகரைச் சோ்ந்த சத்துணவு அமைப்பாளா் சங்கீதா (35), தூத்துக்குடியைச் சோ்ந்த டாஸ்மாக் ஊழியா் கா்ணன் (40), வீரபாண்டியன்பட்டணம் பி.ஜி. நகரைச் சோ்ந்த தமிழ்மாறன் ஆகியோா் ரூ. 3 லட்சம் பெற்ாக கூறப்படுகிறது. ஆனால் பாஸ்டினுக்கு வேலை வாங்கித்தராமல் காலம் கடத்தியதால் பணத்தை திரும்பத் தருமாறு பிரக்ஸிமா கேட்டுள்ளாா். ஆனால் கொடுக்கவில்லையாம்.

இதுகுறித்த புகாரின்பேரில் திருச்செந்தூா் தாலுகா போலீஸாா், 3 போ் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

SCROLL FOR NEXT