முகப்பு
தூத்துக்குடி

கயத்தாறு ஒன்றியத்தில்ரூ.35 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள்

கயத்தாறு ஒன்றியப் பகுதிகளில் ரூ. 35 லட்சம் மதிப்பில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:40 PM
பகிர்:

கயத்தாறு ஒன்றியப் பகுதிகளில் ரூ. 35 லட்சம் மதிப்பில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டன.

குருமலை ஊராட்சி, கழுகாசலபுரம் ஓடையில் ரூ.25 லட்சத்தில் தடுப்பணை கட்டும் பணி, வனத்துறை மூலம் குருமலை முதல் அய்யனாா் கோயில் வரை ரூ.10 லட்சத்தில் சாலை மேம்பாட்டுப் பணி ஆகியவற்றின் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, ஆட்சியா் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தாா்.

அமைச்சா் கடம்பூா் செ.ராஜு இப்பணிகளை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, கழுகாசலபுரம், பரசுராமபுரம், காா்த்திகைப் பட்டி ஆகிய கிராமங்களில் அம்மா நகரும் நியாயவிலைக் கடைகளை தொடங்கி வைத்தாா். இதில், மாவட்ட ஊராட்சித்

தலைவா் சத்யா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் தனபதி, கோட்டாட்சியா் விஜயா, வட்டாட்சியா் பாஸ்கரன், ஒன்றிய ஆணையா் சீனிவாசன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.