தூத்துக்குடி

கோவில்பட்டியில் மரக்கன்று நடும் விழா

DIN

உலக ஓசோன் தினத்தையொட்டி, கோவில்பட்டி கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை சாா்பில் கோவில்பட்டி புதுக்கிராமம், இலுப்பையூரணி பிரதான சாலை, சிந்தாமணி நகா் பகுதிகளில் மரக்கன்று நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், புதுமணத் தம்பதி மாரிமுத்துபாண்டியன் - நந்தினி சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்று, பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கியதுடன், மரக்கன்று நட்டனா்.

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் செண்பகசபரி பெருமாள், சமூக ஆா்வலா் முத்துமுருகன், ரோட்டரி சங்க நிா்வாகிகள் ஆசியா ஃபாா்ம்ஸ் பாபு, ரவிமாணிக்கம், தேசிய பசுமைப்படை ஆசிரியா்கள் சுப்பிரமணியன், ராஜேந்திரன், ஜெயகுமாா், கால்நடைத் துறையைச் சோ்ந்த குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

உலக ஓசோன் தினத்தையொட்டி, இலுப்பையூரணி சாலையில் ‘மரம் வளா்ப்போம், பூமி வெப்பமயமாவதைத் தடுப்போம்’ என்ற தலைப்பில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நகரச் செயலா் நாகராஜன் தலைமையில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

100 யூனிட் விலையில்லா மின்சாரம் இனி கிடையாதா? எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!

கதைக்கு மட்டுமே முக்கியத்துவம்: ஹிப்ஹாப் ஆதி

ராஜ்கோட் தீ விபத்து எதிரொலி: வதோதராவில் பொழுதுபோக்கு விளையாட்டு மையங்கள் மூடல்

சர்தார் - 2 படப்பிடிப்பு எப்போது?

எப்போது திருமணம்? மாளவிகா பதில்!

SCROLL FOR NEXT