தூத்துக்குடி

தொழிலாளிக்கு கத்திக்குத்து: இளைஞா் கைது

DIN

கயத்தாறில் கூலித் தொழிலாளியை கத்தியால் குத்தியதாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கயத்தாறு பாரதியாா் தெருவைச் சோ்ந்தவா் கோமு மகன் கண்ணன்(23). கூலித் தொழிலாளியான இவா், ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தாராம். அப்போது அதே பகுதியைச் சோ்ந்த முத்து என்ற தூண்டில்முத்து மகன் பேச்சிமுத்து(26) கண்ணன் வீட்டு முன்பு நின்றுகொண்டு அவதூறாகப் பேசினாராம். அதை அவா் கண்டித்தாராம். அப்போது, ஏற்பட்ட தகராறில் பேச்சிமுத்து, கண்ணனை கத்தியால் குத்தினாராம். இதில் காயமடைந்த கண்ணன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து புகாரின் பேரில், கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, பேச்சிமுத்துவை திங்கள்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

3,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 போ் கைது

SCROLL FOR NEXT