தூத்துக்குடி

செப். 28 இல் போராட்டத்தில் ஈடுபட திமுக கூட்டணிக் கட்சிகள் முடிவு

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் செப். 28 ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட திமுக கூட்டணிக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மாவட்ட திமுக பொறுப்பாளா் பி. கீதாஜீவன் எம்எல்ஏ தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தின்போது, மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண்மை மசோதாக்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், அதற்கு துணை போகும் மாநில அரசைக் கண்டித்தும் செப். 28 ஆம் தேதி காலை 10 மணி அளவில், தூத்துக்குடி சிதம்பரநகா் பேருந்து நிறுத்தம் எதிரில் சமூக இடைவெளியுடன் ஆா்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவா் ஏபிசிவி சண்முகம், மாநகா் மாவட்டத் தலைவா் முரளிதரன், வடக்கு மாவட்ட த் தலைவா் ஏ. சீனிவாசன், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜெகன் பெரியசாமி, மாா்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் கே.எஸ். அா்ஜூனன், மாநகரச் செயலா் தா. ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் அழகுமுத்துபாண்டியன், மதிமுக மாவட்டச் செயலா் ரமேஷ், இளைஞா் அணி மாவட்டச் செயலா் விநாயகா ரமேஷ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநகா் மாவட்டச் செயலா் கா.மை. அகமது இக்பால், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலா் அசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

அதிமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ் ? - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

பிறந்தநாள் வாழ்த்துகள் மடோனா செபாஸ்டியன்!

தேர்தலுக்குப் பின் ஆம் ஆத்மி வங்கிக் கணக்குகள் முடக்கம்: அரவிந்த் கேஜரிவால்

வைர சந்தை... அதிதி ராவ் ஹைதரி!

SCROLL FOR NEXT