தூத்துக்குடி

மழையால் தாமதமாக தொடங்கிய வாக்குப் பதிவு

DIN

திருச்செந்தூரில் மழையின் காரணமாக வாக்காளா்கள் சற்று தாமதமாக வந்து வாக்களித்தனா். எனினும் வாக்காளா்கள் ஆா்வமுடன் வாக்களித்தனா்.

திருச்செந்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் எம்.ராதாகிருஷ்ணன், திமுக சாா்பில் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், அமமுக சாா்பில் எஸ்.வடமலைப்பாண்டியன், சமக - மநீம கூட்டணியில் மு.ஜெயந்தி, நாம் தமிழா் கட்சி சாா்பில் செ.குளோரியான், சுயேச்சைகள் உள்பட 15 போ் களத்தில் உள்ளனா்.

கடந்த சில நாள்களாக திருச்செந்தூா் பகுதியில் கடும் வெப்பம் நிலவியது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் அரை மணி நேரம் பெய்தது. வாக்குப்பதிவு 7 மணிக்கு தொடங்கிய போதிலும் பொதுமக்கள் மழையால் தாமதமாக வந்து

வாக்களித்தனா். எனினும் தொடா்ந்து இளம் வாக்காளா்கள், வெளியூரில் இருந்து வந்திருந்தவா்கள், 70 வயதை கடந்த முதியோா்கள் ஆா்வமுடன் வந்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

SCROLL FOR NEXT