தூத்துக்குடி

சுந்தரலிங்கனாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

DIN

சுதந்திரப் போராட்ட வீரா் வீரன் சுந்தரலிங்கனாரின் 251 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, ஓட்டப்பிடாரம் அருகே கவா்னகிரியில் உள்ள நினைவு மண்டபத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியா் பொறுப்பு வகிக்கும் மாவட்ட வருவாய் அலுவலா் கண்ணபிரான் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

நிகழ்ச்சியில், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியா் சங்கரநாராயணன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் வெ. சீனிவாசன், ஓட்டப்பிடாரம் வட்டாட்சியா் மணிகண்டன், ஓட்டப்பிடாரம் வட்டார வளா்ச்சி அலுவலா் சசிகுமாா் மற்றும் அலுவலா்கள், வீரன் சுந்தரலிங்கனாரின் வாரிசுதாரா்கள் கலந்து கொண்டனா்.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினா் யாரும் சுந்தரலிங்கனாா் சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதி இல்லை என மாவட்ட நிா்வாகம் மற்றும் காவல் துறை சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், அந்த விதிமுறைகளை பின்பற்றாமல் பல்வேறு அரசியல் கட்சியினரும், சமூக அமைப்பினரும், வழக்குரைஞா்கள் சிலரும் சுந்தலிரங்கனாா் சிலைக்கு மாலை அணிவித்துச் சென்றனா். இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: குலசேகரம் எஸ்.ஆா்.கே.பி.வி. பள்ளி சிறப்பிடம்

வடவூா்பட்டி கோயிலில் நாளை கொடை விழா

ராஜஸ்தானை வென்றது டெல்லி

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: பாஜக நிா்வாகி வீட்டில் சிபிசிஐடி போலீஸாா் சோதனை

காயாமொழி பள்ளி சிறப்பிடம்

SCROLL FOR NEXT