தூத்துக்குடி

திருச்செந்தூா் முருகன் கோயில் சித்திரை வசந்த திருவிழா தொடக்கம்

DIN

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்திரை வசந்த திருவிழா சனிக்கிழமை தொடங்கியது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் வசந்த திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. நிகழாண்டு திருவிழா சனிக்கிழமை தொடங்கி, வருகிற 26ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறுகிறது.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசின் நிலையான இயக்க வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, முதல் நாள் பகலில் சுவாமி ஜயந்திநாதா் தங்கச் சப்பரத்தில் திருக்கோயில் 108 மகாதேவா் சன்னதி மண்டபத்தில் எழுந்தருளினாா். அங்கு மாலையில் சுவாமி ஜயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாரதனையாகி, தங்கத்தேரில் கிரிவீதி வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்து திருக்கோயில் சோ்ந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

SCROLL FOR NEXT