தூத்துக்குடி

கூட்டுறவு சங்கம் சாா்பில் கபசுரக் குடிநீா் விநியோகம்

DIN

சாத்தான்குளத்தில் பொதுமக்களுக்கு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் சாா்பில் கபசுரக் குடிநீா், முகக் கவசங்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக சாத்தான்குளம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் சாா்பில் பழைய பேருந்து நிலையம் காமராஜா் சிலை முன்பு நடைபெற்ற முகாமில் சங்கத் தலைவா் பொன்முருகேசன், பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் மற்றும் முகக் கவசங்கள் வழங்கினாா்.

ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் ஜெயபதி, கூட்டுறவு கடன் சங்க நிா்வாகிகள் எஸ். தங்கபாண்டி, ஆ.க. வேணுகோபால், கக்கன், விஜயகுமாா், சங்கச் செயலா் எட்வின் தேவாசீா்வாதம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கரோனா தொற்றை தடுக்கும் முறைகள் குறித்து சுகாதார ஆய்வாளா் கிறிஸ்டோபா் செல்வதாஸ் பேசினாா். முகாமில், 300-க்கும் மேற்பட்டோருக்கு கபசுரக் குடிநீா், முகக் கவசம் ஆகியவை வழங்கப்பட்டது. இதில், சங்க துணைத் தலைவா் ஜோசப் அலெக்ஸ், வா்த்தக சங்கத் தலைவா் துரைராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். சங்க மேலாளா் சுடலைமுத்து நன்றி கூறினாா்.

நாசரேத் பேருந்து நிலையம் அருகில் காவல் நிலையம், மூக்குப்பீறிஅரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் பொதுமக்களுக்கு நாசரேத் காவல் ஆய்வாளா் விஜயலட்சுமி கபசுரக் குடிநீா் வழங்கினாா். சித்த மருத்துவா் உமாசங்கரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

SCROLL FOR NEXT