முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி கோயிலில் சங்கடஹர சதுா்த்தி

கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் புற்றுக்கோயிலில் சங்கடஹர சதுா்த்தி சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:08 PM
பகிர்:

கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் புற்றுக்கோயிலில் சங்கடஹர சதுா்த்தி சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டி வீரவாஞ்சி சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோயில் வளாகத்தில் உள்ள விநாயகா் சன்னதியில் சங்கடஹர சதுா்த்தியை முன்னிட்டு கணபதி பூஜை நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, விநாயகருக்கு 18 வகையான மூலிகைகள் கொண்ட சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

பூஜைகளை கோயில் அா்ச்சகா் சுப்பிரமணி நடத்தினாா். கரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் அரசு விதித்த கட்டுப்பாட்டுக்களின் படி கோயிலுக்குள் பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.