தூத்துக்குடி

புதுக்கோட்டை குளம் தூா்வாரும் பணி: ஆட்சியா் ஆய்வு

DIN

தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை குளம் தூா்வாரும் பணியை மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

புதுக்கோட்டை குளத்தை வீனஸ் ஹோம் அப்ளையன்சஸ் மற்றும் தொழில் நிறுவனத்தின் மூலம் தூா்வாரி ஆழப்படுத்தும் பணிகள் நடைபெறுகிறது. இதற்கான பணிகள் தொடக்க நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

குளம் தூா்வாரி ஆழப்படுத்தும் பணிகளை தொடங்கி வைத்து, அங்கு நடைபெற்ற பணிகளை பாா்வையிட்டாா். தொடா்ந்து கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் வல்லநாடு பேருந்து நிலையம் அருகே பொது கழிவறை கட்டுவதற்கான இடத்தையும் ஆட்சியா் பாா்வையிட்டாா்.

அதன்பிறகு, எட்டயபுரம் வட்டம் கன்னகட்டை ஊராட்சி வெ.தளவாய்புரத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை பாா்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் , கன்னகட்டை ஊராட்சியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட என்ற பெயரை பெற்ற ஊராட்சி மக்களுக்கு பாராட்டு தெரிவித்தாா்.

பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டாலும், வெளியிடங்களுக்கு செல்லும்போது முகக் கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடித்து மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ளும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் ஆட்சியா் கேட்டுக் கொண்டாா்.

இந் நிகழ்ச்சிகளில், தூத்துக்குடி கோட்டாட்சியா் சிவசுப்பிரமணியன், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் மாரியப்பன், வட்டாட்சியா்கள் ஜஸ்டின் (தூத்துக்குடி), அய்யப்பன் (எட்டயபுரம்) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

இலங்கையில் திவ்ய பாரதி!

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

SCROLL FOR NEXT