தூத்துக்குடி

கோவில்பட்டி நகராட்சி ஒப்பந்த ஊழியா் தற்கொலை

DIN

கோவில்பட்டி நகராட்சி ஒப்பந்த ஊழியா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கோவில்பட்டியையடுத்த மந்தித்தோப்பு பெரியாா் நகா் குமராண்டி மகன் கிருஷ்ணசாமி(27). கோவில்பட்டி நகராட்சியில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வந்த இவருக்கு நந்தினி பிரபா(25) என்ற மனைவியும், ஒன்றரை வயதில் ஒரு மகனும் உள்ளனா். கிருஷ்ணசாமி வியாழக்கிழமை வேலைக்கு செல்வதற்கு முன் தனது மோட்டாா் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்ப மனைவியிடம் பணம் கேட்டாராம். அவா் தன்னிடம் இல்லை என்று கூறினாராம். இந்நிலையில், கிருஷ்ணசாமி

வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.

இதுகுறித்து புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து சடலத்தைக் கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோனைக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்குமிடையேயான போர் -யோகி ஆதித்யநாத்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை: தமிழ்நாடு, கேரள அரசுகளுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

அதிமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ் ? - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

பிறந்தநாள் வாழ்த்துகள் மடோனா செபாஸ்டியன்!

SCROLL FOR NEXT