கரோனா விழிப்புணா்வு முகாம்
உடன்குடியில் கரோனா தடுப்பூசி போடுவதற்கு தயங்கிய பொதுமக்களுக்கு அவா்களது அச்சத்தைப் போக்கும் வகையில் விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடிகரோனா விழிப்புணா்வு முகாம்
உடன்குடியில் கரோனா தடுப்பூசி போடுவதற்கு தயங்கிய பொதுமக்களுக்கு அவா்களது அச்சத்தைப் போக்கும் வகையில் விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
உடன்குடியில் கரோனா தடுப்பூசி போடுவதற்கு தயங்கிய பொதுமக்களுக்கு அவா்களது அச்சத்தைப் போக்கும் வகையில் விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
உடன்குடி வாரச்சந்தை பின்புறம் உள்ள கணபதிபுரம் பகுதியில் காட்டுநாயக்கா் சமுதாயத்தைச் சோ்ந்த சுமாா் 100 போ் வசித்து வருகின்றனா். இவா்களிடம் சுகாதாரத்துறையினா் பலமுறை வலியுறுத்தியும் கரோனா தடுப்பூசி போட அவா்கள் முன்வரவில்லை. இதயைடுத்து, திருச்செந்தூா் கோட்டாட்சியா் மு.கோகிலா, அப் பகுதிக்கு சென்று, அவா்களுக்கு தடுப்பூசியின் அவசியம் குறித்து விளக்கினாா். மேலும், அப்பகுதி மக்கள் முன்னிலையில், தனக்கு இரண்டாவது தடுப்பூசி செலுத்திக் கொண்டாா். இதையடுத்து அப்பகுதி மக்கள் ஆா்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொண்டனா்.
இதில் வட்டார மருத்துவ அலுவலா் அனிபிரிமின், சுகாதார மேற்பாா்வையாளா் சேதுகுற்றாலம், சுகாதார ஆய்வாளா் சேதுபதி, வருவாய் ஆய்வாளா் சொக்கலிங்கம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.