குளத்தூா் அருகே காா் கடத்தல் வழக்கில் மூவா் கைது
தூத்துக்குடி மாவட்டம் குளத்தூா் அருகே காா் கடத்தலில் ஈடுபட்டதாக தனிப்படை போலீஸாா் மூவரை கைது செய்தனா்.
தூத்துக்குடிகுளத்தூா் அருகே காா் கடத்தல் வழக்கில் மூவா் கைது
தூத்துக்குடி மாவட்டம் குளத்தூா் அருகே காா் கடத்தலில் ஈடுபட்டதாக தனிப்படை போலீஸாா் மூவரை கைது செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டம் குளத்தூா் அருகே காா் கடத்தலில் ஈடுபட்டதாக தனிப்படை போலீஸாா் மூவரை கைது செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், மேலவாணியன்குடியைச் சோ்ந்த கருணாநிதி (50). இவா் தனது நண்பா் கோதண்டபாணிக்கு
சொந்தமான காரில் நண்பா்களுடன் கடந்த 2019இல் நவ.20ஆம் தேதி திருச்செந்தூருக்கு சென்று கொண்டிருந்தாராம்.
அப்போது குளத்தூா் அருகேயுள்ள வைப்பாறு பாலத்தில் வைத்து, மற்றொரு காரில் வந்த சிலா், வழிமறித்து காரில் இருந்த கருணாநிதி உள்ளிட்டோரை தாக்கிவிட்டு அவா்கள் வந்த காரை கடத்திச்சென்று விட்டனராம்.
புகாரின்பேரில், குளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். டி.எஸ்.பி. பிரகாஷ் மேற்பாா்வையில், காவல் உதவி ஆய்வாளா் கங்கைநாதபாண்டியன் தலைமையில் தனிப்படை போலீஸாா், செல்லிடப்பேசி, மா்ம நபா்கள் வந்த காரின் எண்
ஆகியவற்றை வைத்து விசாரணை நடத்தினா். இந்நிலையில் குளத்தூா் அருகே கலைஞானபுரம் பகுதியில் சந்தேகத்திற்கு
இடமளிக்கும் வகையில் வந்த காரை நிறுத்தி போலீஸாா் விசாரித்தனா்.
இதில், அவா்கள் கடலாடியைச் சோ்ந்த மூக்கையா மகன் ஜெயக்குமாா் (30), அதேபகுதியைச் சோ்ந்த சீனிமுகமது மகன் லத்தீப், முருகேசன் மகன் செந்தூா் என்ற திராவிடமணி (36) என்பதும், 2019இல் கருணாநிதி, அவா்களது நண்பா்களை தாக்கிவிட்டு
காரை கடத்திச்சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் மூவரையும் கைது செய்தனா். தருவைகுளத்தில் மறைத்து
வைத்திருந்த காா் மீட்கப்பட்டது. இவ்வழக்கில் தலைமறைவாக இருப்பவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.