தூத்துக்குடி

கோவில்பட்டியில் 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

DIN

கோவில்பட்டியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 டன் ரேஷன் அரிசியை கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கோவில்பட்டி, வள்ளுவா் நகா் பகுதியில் உள்ள வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிழக்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆய்வாளா் சுதீஷ் ஆனந்த் தலைமையில் போலீஸாா் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது வள்ளுவா் நகரைச் சோ்ந்த கருப்பசாமி மகன் நாகராஜ் வாடகைக்கு எடுத்துள்ள ஒரு வீட்டை சோதனையிட்ட போது, அங்கு ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த தலா 50 கிலோ எடை கொண்ட 40 மூட்டை அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து, உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு முதல் நிலை காவலா் காளிராஜிடம் ஒப்படைத்தனா்.

மேலும் அரிசியை பதுக்கி வைத்திருந்த நாகராஜை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

ஓ மை ரித்திகா!

பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த காங்கிரஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 08.05.2024

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

SCROLL FOR NEXT