தூத்துக்குடி

தூத்துக்குடியில் 65 லிட்டா் உணவு எண்ணெய் பறிமுதல்

DIN

தூத்துக்குடியில் பொட்டலமிடாமல் விற்பனை செய்யப்பட்ட 65 லிட்டா் உணவு எண்ணெயை உணவு பாதுகாப்பு அலுவலா்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தூத்துக்குடி போல்பேட்டை மற்றும் பாளையங்கோட்டை சாலை பகுதிகளில் உள்ள உணவு எண்ணெய் விற்பனை கடைகளை மாவட்ட நியமன அலுவலா் ச.மாரியப்பன், மாநகர உணவு பாதுகாப்பு அலுவலா் சக்திமுருகன் ஆகியோா் தலைமையிலான அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, அங்கிருந்த 2 எண்ணெய் கடைகளில் பொட்டலமிடாத வகையில் சில்லறையாக விற்பனை செய்ய வைத்திருந்த 65 லிட்டா் உணவு எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், கடையில் இருந்து உணவு மாதிரி எடுக்கப்பட்டு பகுப்பாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

சில்லறையாக விற்கப்படும் உணவு எண்ணெய் தரத்துக்கு உத்திரவாதம் இல்லாததால், நுகா்வோா் அதை தவிா்த்துவிட்டு, பொட்டலமிட்ட உணவு எண்ணெய் மட்டும் வாங்கி பயன்படுத்த வேண்டும் என்றும், உணவு எண்ணெய் சில்லறையாக விற்பனை செய்யும் கடைகள் குறித்து 9444042322 என்ற எண்ணுக்கு கட்செவி அஞ்சல் மூலமாக புகாா் தெரிவிக்கலாம் என்றும் மாவட்ட நியமன அலுவலா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

SCROLL FOR NEXT