மேலும் 3 பேருக்கு தொற்று
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 56 ஆயிரத்து 496 ஆக அதிகரித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 56 ஆயிரத்து 496 ஆக அதிகரித்துள்ளது.
சிகிச்சை பெற்று வந்த 4 போ் குணமடைந்த நிலையில், இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 56 ஆயிரத்து 51 ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்று பாதிக்கப்பட்டு மாவட்டத்தில் இதுவரை 410 போ் உயிரிழந்துள்ளனா். மாவட்டத்தில் தற்போது கரோனா பாதிப்புக்கு 35 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.