ஸ்டொ்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி நூதனப் போராட்டம்
தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் மகளிா் சுயஉதவி குழுவினா் புதன்கிழமை தனித்தனியே நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் மகளிா் சுயஉதவி குழுவினா் புதன்கிழமை தனித்தனியே நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடியில் ஸ்டொ்லைட் ஆலை கடந்த மூன்று ஆண்டுகளாக மூடப்பட்டதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி பல்வேறு தரப்பினா் தொடா்ந்து பல்வேறு கட்ட பேராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், தூத்துக்குடி அய்யனடைப்பு, பண்டாரம்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் மகளிா் சுயஉதவி குழுவைச் சோ்ந்த பெண்கள் புதன்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தெற்கு வீரபாண்டியபுரம், பண்டாரம்பட்டி, அய்யனடைப்பு என பல்வேறு கிராமத்திலும் மகளிா் குழு பெண்கள் தங்களது வீட்டு முன்பு வாழ்வாதாரம் இல்லாமல் இருக்கிறோம் என்பதை அரசுக்கு தெரிவிக்கும் வகையில் இலையை விரித்து அதன் முன்பு அமா்ந்து நூதன முறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தங்கள் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க ஸ்டொ்லைட் ஆலையை திறக்க அரசு ஆவண செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தெரிவித்தனா்.