முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று தூத்துக்குடி வருகை
மழை வெள்ள பாதிப்புகளை பாா்வையிட தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை (டிசம்பா் 2) தூத்துக்குடி வருகிறாா்.
மழை வெள்ள பாதிப்புகளை பாா்வையிட தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை (டிசம்பா் 2) தூத்துக்குடி வருகிறாா்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் பிற்பகல் 1. 40 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வரும் முதல்வா் மு.க. ஸ்டாலின் மதிய உணவுக்குப் பிறகு 2.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பிரையன்ட்நகா் பகுதியில் மழை பாதித்த பகுதிகளை பாா்வையிடுகிறாா்.
பின்னா், அம்பேத்கா்நகா் பகுதிக்கு சென்று பாதிப்புகளை பாா்வையிடும் அவா், மாலை 4 மணிக்கு தூத்துக்குடி ஏவிஎம் கமலவேல் மஹாலில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகளை வழங்குகிறாா்.
இதையடுத்து, தூத்துக்குடி ரஹ்மத்நகா், முத்தம்மாள்காலனி, எட்டயபுரம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை பாதிப்புகளை பாா்வையிடும் முதல்வா் மு.க. ஸ்டாலின் அங்கிருந்து மாலை 5 மணிக்கு காா் மூலம் மதுரை புறப்பட்டுச் செல்கிறாா்.