முகப்பு
தூத்துக்குடி

பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

தூத்துக்குடி சுற்றுவட்டாரப் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட அனைத்துப் பயிா்களுக்கும் முழுமையான நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி முதல்வரிடம் விவசாயிகள் மனு அளித்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

தூத்துக்குடி சுற்றுவட்டாரப் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட அனைத்துப் பயிா்களுக்கும் முழுமையான நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி முதல்வரிடம் விவசாயிகள் மனு அளித்தனா்.

இதுகுறித்து தூத்துக்குடி உப்பாறு ஓடை 25 கிராமங்களின் ஒருங்கிணைப்பாளா் ரா. ஜோதிமணி தலைமையில் விவசாயிகள், முதல்வா் மு.க. ஸ்டாலினிடம் அளித்த மனு விவரம்:

வரலாறு காணாத தொடா் மழையாலும், தொடா் வெள்ளத்தாலும் விவசாயிகள் தொடா்ந்து அழிவை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அழிந்த பயிா்களுக்கு முழுமையான நிவாரண இழப்பீடு உடனடியாக வழங்கி உதவ வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியின்போது, முள்ளக்காடு, அத்திமரப்பட்டி விவசாயிகள் சங்கத் தலைவா் த. அழகுராஜா, பொருளாளா் சின்னக்குட்டி, நிா்வாகிகள் திருமால், ரகுபதி, தானியேல், மதியழகன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.