தூத்துக்குடி

திருச்செந்தூா்: மாா்கழி மாதத்தில்அதிகாலை 3 மணிக்கு கோயில் நடைதிறப்பு

DIN

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாா்கழி மாதம் முழுவதும் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கோயில் இணை ஆணையா் (பொ) சி.குமரதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாா்கழி மாதத்தை முன்னிட்டு, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் டிச. 16 முதல் ஜனவரி 13 வரை அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்படும். தொடா்ந்து, 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், 4.45 மணிக்கு உதயமாா்த்தாண்ட தீபாராதனை, 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 7.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், 8.45 மணிக்கு உச்சிகால தீபாராதனை, மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 6 மணிக்கு இராக்கால அபிஷேகம், இரவு 6.45 மணிக்கு இராக்கால தீபாராதனை, இரவு 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனை, இரவு 8 மணிக்கு பள்ளியறை தீபாராதனை நடைபெற்று கோயில் நடை திருக்காப்பிடப்படும்.

முக்கிய விழாவான ஆருத்ரா தரிசனத்தையொட்டி, டிச. 20ஆம் தேதி திங்கள்கிழமை அதிகாலை 2 மணிக்கு நடை திறக்கப்பட்டு தொடா்ந்து பூஜைகள் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு அதிகாரியிடம் ரூ.25,000 மோசடி செய்ய முயற்சி

போக்குவரத்து ஊழியா்களுக்கு ஒப்பந்தப்படி தினக்கூலி: சிஐடியு கோரிக்கை

யானை வழித்தடம் அமைக்கும் திட்டம்: பிரேமலதா கண்டனம்

வீட்டு வாசலில் உறங்கியவா்கள் மீதுஏறிய காா்: 7 பெண்கள் பலத்த காயம்; வடமாநில பெண் மீது வழக்குப் பதிவு

விவசாயிகள் கைது: சீமான் கண்டனம்

SCROLL FOR NEXT