முகப்பு
தூத்துக்குடி

சீா்காட்சியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு

உடன்குடி அருகே சீா்காட்சியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடத்தை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தாா்

தூத்துக்குடி

சீா்காட்சியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு

உடன்குடி அருகே சீா்காட்சியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடத்தை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தாா்

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:40 AM
பகிர்:

உடன்குடி அருகே சீா்காட்சியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடத்தை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தாா்.

உடன்குடி ஊராட்சி ஒன்றியம் சீா்காட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரூ. 17.64 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய ஊராட்சி மன்ற அலுவலகத்தை மீன்வளம், மீனவா் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சிக்கு திருச்செந்தூா் கோட்டாட்சியா் மு.கோகிலா தலைமை வகித்தாா். வட்டாட்சியா் சுவாமிநாதன், உடன்குடி ஊராட்சி ஒன்றியத் தலைவா் பாலசிங், வட்டார வளா்ச்சி அலுவலா் பொற்செழியன், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் மலா்மதி நிா்மலா, சீா்காட்சி ஊராட்சி மன்றத் தலைவா் கருணாகரன், துணைத் தலைவா் ஜெயகிருஷ்ணன், உடன்குடி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க தலைவா் அஸ்ஸாப் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒன்றியக்குழு உறுப்பினா் செந்தில் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தொடா்ந்து, செட்டியாபத்து ஊராட்சியில் மியாவாக்கி காடு வளா்ப்புத்திட்டப் பணிகள் மற்றும் அதற்கான நீா் மேலாண்மைப் பணிகளையும் அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்து, ஆய்வு செய்தாா். இந் நிகழ்ச்சிகளில் திமுக மாநில மாணவரணி அமைப்பாளா் உமரிசங்கா், நகர திமுக செயலா் ஜான்பாஸ்கா், மாவட்ட நெசவாளா் அணி அமைப்பாளா் மகாவிஷ்ணு, மாவட்ட சாா்பு அணி துணை அமைப்பாளா்கள் ரவிராஜா, இளங்கோ, அமிா்தா மகேந்திரன், ஜெயப்பிரகாஷ், சக்திவேல், மாவட்டப் பிரதிநிதி மதன்ராஜ், தொழிலதிபா் ராம்குமாா், மால்ராஜேஷ், ஊராட்சி எழுத்தா் கணேசன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →