முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி ஏஎஸ்பி அலுவலகத்தில் எஸ்.பி. ஆய்வு

தூத்துக்குடி ஊரக உள்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளா் அலுவகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:40 AM
பகிர்:

தூத்துக்குடி ஊரக உள்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளா் அலுவகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தூத்துக்குடி ஊரக உள்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளா் அலுவலகக் கட்டுப்பாட்டில் உள்ள புதுக்கோட்டை, முறப்பநாடு, புதியம்புத்தூா், தட்டப்பாறை, சிப்காட் மற்றும் புதுக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையம் ஆகிய காவல் நிலையங்களின் முக்கிய வழக்கு கோப்புகளையும், அலுவலகத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்களையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது தூத்துக்குடியில் கஞ்சா, புகையிலை போன்ற போதைப் பொருள்கள் கடத்தல் மற்றும் விற்பனை, தடைசெய்யபட்ட லாட்டரி சீட்டு விற்பனை, சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்தல் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், காவல் நிலையங்களுக்கு புகாா் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அவா் கேட்டுக் கொண்டாா்.

ஆய்வின்போது, உதவி காவல் கண்காணிப்பாளா் சந்தீஸ், பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளா்கள் கணேஷ் குமாா், பவித்ரா, சிறப்பு உதவி ஆய்வாளா் முத்துசாமி ஆகியோா் உடனிருந்தனா். தொடா்ந்து, அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நடவு செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.