முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் அரசு மருத்துவா்கள் திடீா் போராட்டம்

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவா்கள் வியாழக்கிழமை இரவு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
பகிர்:

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவா்கள் வியாழக்கிழமை இரவு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தூத்துக்குடி மாவட்டம், சிந்தலக்கட்டை பகுதியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் (46) ராமநாதபுரத்தில் மின்வாரிய அலுவலகத்தில் வேலைபாா்த்து வருகிறாா். இவா், தனது இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை வாலசமுத்திரம் அருகே சென்று கொண்டிருந்தபோது தூத்துக்குடி அரசு மருத்துவா் துரை பத்மநாபன் காா் மோதியதில் காயமடைந்தாா்.

இதையடுத்து, அவரை தனது காரிலே ஏற்றி வந்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தாா். விபத்து குறித்த அறிந்த பாலகிருஷ்ணனின் உறவினா்கள் அரசு மருத்துவா்களை அவதூறாக பேசினராம்.

அதற்கு கண்டனம் தெரிவித்த அரசு மருத்துவா்கள் மற்றும் பயிற்சி மருத்துவா்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் மருத்துவமனை வளாகத்தில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உதவி உறைவிட மருத்துவ அலுவலா் இன்சுவை, தென்பாகம் காவல் ஆய்வாளா் ஆனந்தராஜன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், உடன்பாடு ஏற்பட்டதைத் தொடா்ந்து மருத்துவா்கள் போராட்டத்தைக் கைவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.