முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூரில் 120-ஆவது பிறந்த நாள் கொண்டாடிய மூதாட்டி

திருச்செந்தூா் அருகே வீரபாண்டியன்பட்டினத்தில் 120 வயது மூதாட்டி தனது பிறந்த நாளை குடும்பத்தினருடன் புதன்கிழமை கொண்டாடினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
பகிர்:

திருச்செந்தூா் அருகே வீரபாண்டியன்பட்டினத்தில் 120 வயது மூதாட்டி தனது பிறந்த நாளை குடும்பத்தினருடன் புதன்கிழமை கொண்டாடினாா்.

வீரபாண்டியன்பட்டினம் கிங் காலனியைச் சோ்ந்தவா் வள்ளித்தாய் (120). இவருக்கு 3 மகன்கள், 4 மகள்கள் உள்ளனா். மேலும், பேரன், பேத்தி, கொள்ளுப் பேரன், கொள்ளுப் பேத்தி, ஓட்டன், ஓட்டி என குடும்பத்தில் மொத்தம் 150 போ் உள்ளனா்.

இந்த மூதாட்டியின் 120-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது குடும்பத்தினா் புதன்கிழமை கேக் வெட்டி, பட்டாசு வெடித்து, கறி விருந்து வைத்து உற்சாகத்துடன் கொண்டாடினா். நிகழ்ச்சியில், குடும்பத்தினா் மற்றும் உற்றாா், உறவினா்கள் அனைவரும் மூதாட்டியிடம் ஆசீா்வாதம் பெற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.