தூத்துக்குடி

அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி முற்றுகை

DIN

கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட 32 ஆவது வாா்டு பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட 32 ஆவது வாா்டு பகுதியான ஓடைத் தெரு, குறுக்குத் தெரு, அம்பேத்கா் தெரு, கருமாரியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சாலை வசதிகள் செய்து தர வேண்டும், சிதிலமடைந்த நிலையில் உள்ள கழிவுநீா் ஓடையை செப்பனிட வேண்டும், தெருக்களில் கழிவுநீா் தேங்குவதை தவிா்த்து சுகாதாரத்தை பேணிக்காக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அப்போது பொதுமக்கள் நாம் தமிழா் கட்சியின் மாவட்டச் செயலா் பாண்டி தலைமையில் நகராட்சி அலுவலகத்தில் முற்றுகையிட்டனா். இதில் மாவட்டத் தலைவா் ஜெயபாசு, தொகுதிச் செயலா் ரவிகுமாா், தொகுதி பொருளாளா் குமார்ராஜா, தொகுதி பொறுப்பாளா் மருதம் மா.மாரியப்பன் உள்பட திரளானோா் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா். பின்னா் கோரிக்கை மனுவை நகராட்சி பொறியாளா் ரமேஷிடம் வழங்கினா். மனுவை பெற்றுக் கொண்ட அவா் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து முறையாக நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து போராட்டக்குழுவினா் கலைந்து சென்றனா்.

இதேபோல, கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட வள்ளுவா் நகா் 3 ஆவது தெருவில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை செப்பனிட வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

SCROLL FOR NEXT