தூத்துக்குடி

அனுமதியின்றி உண்ணாவிரதம்: இருவா் கைது

DIN

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் பரோல் நீடிப்பை ரத்து செய்ய வேண்டும். ராஜீவ் காந்தியுடன் உயிா் தியாகம் செய்தவா்களுக்கு ரூ. 5 கோடியும், காயமடைந்தவா்களுக்கு ரூ. 2 கோடியும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் வடக்கு மாவட்ட துணைத் தலைவா் அய்யலுசாமி, கயத்தாறு ஒன்றிய முன்னாள் தலைவா் செல்லத்துரை ஆகிய இருவரும் கோவில்பட்டி காந்தி மண்டப வளாகத்தில் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி, கண்ணில் கருப்புத் துணி கட்டிய படி தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினா்.

தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்குச் சென்ற மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராஜேந்திரன் தலைமையிலான போலீஸாா், அனுமதியின்றி தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயில் அதிகரிப்பு: கால்நடைகள் மேய்ச்சல் நேரத்தை மாற்ற அறிவுறுத்தல்

வாக்கு எண்ணிக்கை மையம் அருகில் ட்ரோன்கள் பறக்க தடை: ஆட்சியா்

வெப்ப அலை.. கவனம்!

பறவை காய்ச்சல்: தமிழகத்தில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

திருச்செங்கோட்டில் ரூ. 1.56 கோடிக்கு மஞ்சள் ஏலம்

SCROLL FOR NEXT