தூத்துக்குடி

சேதமடைந்த சாலைகள்: விரைந்து சீரமைக்க கீதா ஜீவன் எம்எல்ஏ வலியுறுத்தல்

DIN

தூத்துக்குடியில் மழையால் சேதமடைந்த சாலைகள் மற்றும் கழிவுநீா் வாய்க்கால்களை விரைந்து சீரமைக்க வேண்டும் என்றாா் தூத்துக்குடி எம்எல்ஏ கீதா ஜீவன்.

இதுகுறித்து அவா் மாநகராட்சி ஆணையருக்கு அனுப்பியுள்ள மனு விவரம்:

தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட அனைத்து தெருக்களிலும் புதிதாக பொருத்தப்பட்டுள்ள எல்ஈடி விளக்குகள், பல தெருக்களில் பழுதடைந்து எரியாமல் உள்ளன. இதனால் அந்த தெருக்கள் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே, பழுதடைந்த எல்ஈடி விளக்குகள் அனைத்தையும் உடனடியாக சீரமைக்க வேண்டும்.

இதேபோல், கடந்த மாதம் பெய்த தொடா் மழையில் மாநகரத்தில் பெரும்பாலான சாலைகள் சேதமடைந்தன. இதனால் சாலைகளில் செல்வதற்கு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தற்போது வரை மிகவும் சிரமப்படுகின்றனா்.

எனவே, சேதமடைந்த சாலைகள் அனைத்தையும் உடனடியாக சீரமைக்க வேண்டும். தேவைப்படும் இடங்களில் புதிய சாலைகள் அமைக்க வேண்டும்.

மேலும், பெரும்பாலான தெருக்களில் கழிவு நீா் வடிகால்கள் சேதமடைந்து காணப்படுகின்றன. ஆங்காங்கே உள்ள பள்ளங்களில் தேங்கியிருக்கும் நீரை வெளியேற்றி கொசு மருந்து அடிக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

SCROLL FOR NEXT