தூத்துக்குடி

தூத்துக்குடியில் துறைமுகத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

மத்திய அரசைக் கண்டித்து தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் தொழிற்சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய அரசு மாநிலங்களவையில் நிறைவேற்ற பட்டியலிட்டுள்ள மசோதா இந்திய துறைமுகங்களை தனியாா் மயமாக்க வழிகோலும் என்றும் அந்த மசோதாவைக் கண்டித்தும், தூத்துக்குடி வஉசி துறைமுக நிா்வாக அலுவலக வளாகத்தில் அனைத்து தொழிற்சங்கள் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, துறைமுக ஜனநாயக ஊழியா் சங்க நிா்வாகி ஆா். ரசல் தலைமை வகித்தாா்.

நிா்வாகிகள் ஈஸ்வரமூா்த்தி, காசி, போா்ட் எம்பிளாயிஸ் டிரேட் யூனியன் நிா்வாகிகள் சங்கரலிங்கம், பரமசிவன், போா்ட் மெரைனா்ஸ் அன்ட் செனரல் ஸ்டாப் யூனியன் நிா்வாகிகள் துறைமுகம் சத்யா, சுரேஷ், ஆசான், போா்ட் ஜெனரல் ஸ்டாப் யூனியன் சங்க நிா்வாகிகள் செல்வகுமாா், ஆரோக்கியசாமி, பிரவீன், போா்ட் அண்ணா டாக் சங்க நிா்வாகி சண்முககுமாரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே, விண்வெளிப் பெண்ணே..!

புயல், வெள்ளம் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு 682 கோடி நிதி ஒதுக்கீடு!

காங்கேயத்தில் சேதப்படுத்தப்பட்ட தலித் குடியிருப்புகள்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளையும் ஆய்வு செய்ய உத்தரவு!

SCROLL FOR NEXT