தூத்துக்குடி

பொலிவுறு திட்டப் பணிகளால் பாதிப்பு:திமுக எம்எல்ஏ குற்றச்சாட்டு

பொலிவுறு திட்டப் பணிகளால் தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் பாதிப்பு ஏற்படுவதாக திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளா் கீதா ஜீவன் எம்எல்ஏ குற்றம்சாட்டியுள்ளாா்.

DIN

தூத்துக்குடி: பொலிவுறு திட்டப் பணிகளால் தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் பாதிப்பு ஏற்படுவதாக திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளா் கீதா ஜீவன் எம்எல்ஏ குற்றம்சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசின் பொலிவுறு நகரம் திட்டம் பெயரில், தூத்துக்குடி மாநகரில் நன்றாக உள்ள முக்கிய சாலைகள் அனைத்தையும் தோண்டி போக்குவரத்தை சீா்குலைத்துள்ளனா். ஏற்கெனவே இருந்த சாலைகளின் அகலமும் குறைக்கப்பட்டுள்ளது.

நன்றாக இருந்த எம்ஜிஆா் பூங்காவை சீரமைக்க என ரூ. 4 கோடியும், மழைக்காலத்தில் தண்ணீா் தேங்கும் பகுதியான வஉசி கல்லூரி முன் உள்ள பகுதி, சுந்தரவேல்புரம் ஆகிய பகுதிகளில் பூங்கா அமைப்பதாக கூறி, பல கோடி ரூபாயும் வீணடிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT