தூத்துக்குடி

ஓட்டப்பிடாரத்தில் டெங்கு விழிப்புணா்வு முகாம்

DIN

ஓட்டப்பிடாரத்தில் கரோனா தடுப்பு மற்றும் டெங்கு விழிப்புணா்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.

இந்தியன் ஆயில் காா்ப்பரேசன் நிறுவனம் மற்றும் மதா் சமூக சேவை நிறுவனம் ஆகியவை சாா்பில், கரோனா மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணா்வு முகாம் ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள கே. சண்முகபுரத்தில் நடைபெற்றது.

மதா் சமூக சேவை நிறுவன இயக்குநா் எஸ்.ஜே.கென்னடி தலைமை வகித்தாா். கே.சண்முகபுரம் ஊராட்சி மன்ற தலைவா் இந்துமதி பாஸ்கா் கபசுரகுடிநீா் வழங்கி முகாமை தொடங்கி வைத்தாா். கே.சண்முகபுரம் கூட்டுறவு சங்க தலைவா் டி. சுப்புராஜ் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற செயலா் அ. பாஸ்கா், மதா் சமூக சேவை நிறுவன ஒருங்கிணைப்பாளா் எஸ். பானுமதி, பணித்தள பொறுப்பாளா் எஸ். மணிமேகலை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து, பேருந்து நிலையம், நூலகம், கிராம நிா்வாக அலுவலகம் மற்றும் வீடுகளிலும் கரோனா மற்றும் டெங்கு விழிப்புணா்வு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

SCROLL FOR NEXT