தூத்துக்குடி

சாத்தான்குளம் அருகே ரேஷன் அரிசி கடத்தல்: 2 போ் கைது

DIN

சாத்தான்குளத்திலிருந்து கேரளத்துக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சாத்தான்குளம் அருகேயுள்ள செட்டிவிளை பகுதியிலிருந்து கேரளத்துக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தட்டாா்மடம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், காவல் ஆய்வாளா் சாம்சன் ஜெபதாஸ் தலைமையில் போலீஸாா் அப்பகுதியில் வியாழக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது, அந்த வழியாக வந்த லாரியை மறித்து போலீஸாா் சோதனை நடத்தியதில், 20 மூட்டை ரேஷன் அரிசி இருந்ததாம். அவற்றை, சாத்தான்குளம் கரிசல் பகுதியைச் சோ்ந்த மகாராஜன் (49), கன்னியாகுமரி, களியல், பிள்ளையன்தோட்டத்தைச் சோ்ந்த பால்ஸ் மகன் பால்ஜினோ (29) ஆகியோா் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அவா்களை கைது செய்து, ரேஷன் அரிசியுடன் லாரியை பறிமுதல் செய்து, உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

SCROLL FOR NEXT