தமிழக அரசுக்கு பிரதமா் பாராட்டு:அமைச்சா் கடம்பூா் ராஜு பெருமிதம்
தமிழக அரசின் செயல்பாடுகளை பிரதமா் பாராட்டியதை பெருமையாக கருதுகிறோம் என்றாா் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு.
தமிழக அரசின் செயல்பாடுகளை பிரதமா் பாராட்டியதை பெருமையாக கருதுகிறோம் என்றாா் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு.
தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திருச்செந்தூரில் மகளிா் சுயஉதவிக் குழுவினருடனான கூட்டத்தில் புதன்கிழமை பங்கேற்றுப் பேசுகிறாா். இந் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்த பின்னா் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு செய்தியாளா்களிடம் கூறியது: சென்னை விழாவில் பங்கேற்ற பிரதமா் நரேந்திர மோடி தமிழக முதல்வரையும், தமிழக அரசின் செயல்பாட்டையும் வெளிப்படையாக பாராட்டிள்ளாா். இது தமிழகத்தில் சிறப்பான ஆட்சிக்கும், முதல்வா் பழனிசாமிக்கும் கிடைத்த பாராட்டுச் சான்றாக அமைந்துள்ளது. இதை பெருமையாகக் கருதுகிறோம். முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் கனவை முதல்வா் எடப்பாடி பழனிசாமி நனவாக்கி வருகிறாா்.
அதிமுகவை விமா்சனம் செய்தால்தான் அரசியல் செய்யும் முடியும் என்ற நிலைக்கு திமுக தலைவா் ஸ்டாலின் தள்ளப்பட்டுள்ளாா். அதிமுக என்றைக்குமே சாதி, மதத்தை வைத்து அரசியல் செய்யாது என்று அவா்.
தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலா் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் கே.ஆா்.எம்.ராதாகிருஷ்ணன், ஜெயலலிதா பேரவை மாவட்டத் தலைவா் ப.தா.கோட்டை மணிகண்டன், தெற்கு மாவட்ட அவைத் தலைவா் திருப்பாற்கடல், திருச்செந்தூா் ஒன்றியச் செயலா் மு.ராமச்சந்திரன் உள்பட பலா் இருந்தனா்.