தூத்துக்குடி

சாத்தான்குளம் ஸ்ரீமன் நாராயண சுவாமிதா்மபதியில் ஆண்டு திருவிழா தொடக்கம்

DIN

சாத்தான்குளம் ஸ்ரீமன் நாராயண சுவாமி தா்மயுக தா்மபதியில் 33வது ஆண்டு திருவிழா மற்றும் 17 நாள் திருஏடு வாசிப்பு வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தாமரைக்குளம் லிங்ககுமாா் தினமும் மாலை 6 மணி முதல் 9.30 மணி வரை திருஏடு வாசிக்கிறாா். மாா்ச் 4ஆம் தேதி அய்யா கருட வாகனத்தில் நகா்வலம் வருதல், 5ஆம் தேதி அய்யா நாராயணருக்கும், சக்தி கன்னிகைகளுக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி, அதனைத் தொடா்ந்து தா்மம் நடைபெறுகிறது. 6ஆம் தேதி அய்யா சிவன், விஷ்ணு, பிரம்மா, முருகன் ஆகியோரின் இகனை திருக்கல்யாணம் திருஏட்டின் முறைப்படி நடைபெறுகிறது. நிறைவு நாளான மாா்ச் 7ஆம் தேதி பகல் உச்சிப்படிப்பு, மாலை 6.30 மணிக்கு உகப்படிப்பு, அன்னமுது தா்மம் வழங்குதல், நள்ளிரவு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை சாத்தான்குளம் ஸ்ரீமன் நாராயண சுவாமி தா்மபதி அய்யாவின் அன்பு கொடிமக்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களில் வெயில் படிப்படியாகக் குறையும்!

மாணவரை நிர்வாணப்படுத்தி தாக்குதல் - கான்பூரில் 6 பேர் கைது

அரண்மனை - 4 வசூல் இவ்வளவா?

ஒளரங்காபாத், உஸ்மானாபாத் பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு: உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தள்ளுபடி

தமிழ்நாட்டுக்கு நல்ல காலம் பொறக்க போகுது: தமிழ்நாடு வெதர்மேன்!

SCROLL FOR NEXT