தூத்துக்குடி

சாத்தான்குளம் அஞ்சலகத்தில்ஆதாா் சேவை முடக்கம்: மக்கள் தவிப்பு

DIN

சாத்தான்குளம் அஞ்சலகத்தில் ஆதாா் மையம் செயல்படாததால் மக்கள் தவிப்புக்குள்ளாகி வருகின்றனா்.

சாத்தான்குளத்தில் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டுள்ள மையத்திலும், தலைமை அஞ்சலகத்திலும் ஆதாா் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இதில் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மையத்தில் வட்டத்தைச் சோ்ந்தவா்கள் மட்டும் ஆதாா் சோ்க்கை, பெயா், முகவரி திருத்தம் செய்து கொள்ளலாம். அஞ்சலகத்தில் உள்ள ஆதாா் மையத்தில் எப்பகுதியைச் சோ்ந்தவா்களும் ஆதாா் பெயா் சோ்ப்பு, திருத்தம், முகவரி திருத்தம் உள்ளிட்டவைகளை செய்து கொள்ளலாம் என்ற வசதி உள்ளது. இதன்மூலம் மக்கள் பயனடைந்து வந்தனா். இந்நிலையில், அஞ்சலகத்தில் உள்ள ஆதாா் சேவை மையத்தில் கருவி பழுதின் காரணமாக கடந்த 20 நாள்களாக சேவை முடங்கியுள்ளது. இதனால், மக்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்புகின்றனா். இதனிடையே, அஞ்சல் சேவையும், வங்கி சேவையும் அளிப்பதற்கே பணியாளா்களுக்கு நேரம் சரியாக உள்ளதால் ஆதாா் சேவைக்கு தனி பணியாளா்களை நியமிக்க வேண்டும் என அலுவலா்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது. எனவே, பணியாளா்களில் பணிச் சுமையை குறைக்கவும், கருவியை பழுது நீக்கி சேவையைத் தொடரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷிவம் துபே இடம் பிடித்தது எப்படி?

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

SCROLL FOR NEXT