தூத்துக்குடி

சந்தையடியூா் பதியில் பால்முறைத் திருவிழா தொடக்கம்

DIN

தாகம் தணிந்த பதி என்றழைக்கப்படும் உடன்குடி சந்தையடியூா் நாராயணசுவாமி திருக்கோயிலில் தை மாதப் பால்முறைத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

இதையொட்டி ஜன.10 ஆம் தேதி மாலை 6 மணிக்கு அய்யா அன்ன வாகனத்தில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். திங்கள்கிழமை(ஜன.11) காலை 9 மணிக்கு அய்யா நாக வாகனத்தில் பவனி, மாலை 3 மணிக்கு தா்மம் எடுத்தல், 5 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, நள்ளிரவு 12 மணிக்கு அய்யா குதிரை வாகனத்தில் பவனி நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை (ஜன.12) அதிகாலை 4 மணிக்கு உம்பான் அன்னதா்மம் வழங்கல், மாலை 6 மணிக்கு அய்யா கருட வாகனத்தில் பவனி, புதன்கிழமை( ஜன.13) மாலை 3 மணிக்கு சந்தனக்குடம் நேமிசம் எடுத்தல், மாலை 6 மணிக்கு அய்யாஅனுமாா் வாகனத்தில் பவனி நடைபெறுகிறது. வியாழக்கிழமை( ஜன.14) அதிகாலை 3 மணிக்கு பால் வைத்தல், 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் அய்யா பவனி ஆகியன நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை விழாக்குழுவினா், சந்தையடியூா் ஊா் மக்கள் செய்து வருகினறனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

48 வயதினிலே..

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

SCROLL FOR NEXT